முதலில் பிறந்தது திரு அவையா (திருச்சபை) திருவிவிலியமா (பைபிள்)?

which-came-first-bible-or-church

நமது பிரிவினை சகோதரர்கள் நம்மிடம் திருவிவிலியத்தை கோடிட்டு நமது கத்தோலிக்க விசுவாசத்தையும் நடைமுறைகளையும் கேள்விகுள்ளாகுவது உண்டு.  நம்முடைய அணைத்து கத்தோலிக்க விசுவாசதிற்க்கும் பாம்பரியதிர்க்கும் திருவிவிலிய ஆதாரமுண்டு.

அவர்கள் மேற்கோள் காட்டும் திருவிவிலியதின் வளர்ச்சியையும்  திரு அவையின்  தோற்றத்தையும் புரிந்துகொண்டால் அவர்களின் கேள்விகளுக்கு நம்மால் திறன்பட பதில் அளிக்க முடியும்.

முதலில் திரு அவையின் தோற்றத்தை பற்றி பார்ப்போம்.

கத்தோலிக்க திரு அவையின்  வரலாற்று தோற்றத்தை புரிந்துகொள்வது நமது விசுவாசத்திற்க்கு  முக்கியமானது.

திருவிவிலிய சான்று: இயேசு ஒரு திரு அவையை நிறுவினார்

திருத்தந்தை பெனடிக்ட் XVI (அவர் கார்டினல் ராட்சிங்கர் ஆக இருந்த போது) கூறுகிறார் ,  இயேசு முதல் பன்னிரண்டு திருத்தூதர்களை உருவாக்கியாது,   கத்தோலிக்க திரு அவையின் தோற்றதிர்க்கான முதல் அடையாளம். தூய மாற்கு தனது நற்ச்செய்தியில் எழுதுகிறார், “இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.” (மாற் 3: 13-15). திருதந்தையின்  கருத்துக்கள்:

பன்னிரண்டு குறியீட்டு மதிப்பு … தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்தது: … யாக்கோபின் மகன்களின் எண்ணிக்கை, … இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்கள் …. [இதைச் செய்வதன் மூலம்] இயேசு ஒரு புதிய இஸ்ரயேலின் பரம்பரைத் தலைவராக தன்னை அடையாளப்படுத்தி, இந்த பன்னிரண்டு ஆண்களை அதன் தோற்றம் மற்றும் அடித்தளமாக நிறுவுகிறார். ஒரு புதிய மக்களின் தொடக்கத்தை வெளிப்படுத்த இதை விட எந்த ஒரு தெளிவான வழி இருக்க முடியாது, இது இனி உடல் வம்சாவளியினரால் உருவானது அல்ல, ஆனால் ‘இயேசுவுடன் இருப்பது’ …. (Called to Communion, p.24-25)

இதன் பிறகு, கத்தோலிக்க திரு அவையின் தோற்றம் பற்றிய முதல் வெளிப்படையான சாட்சியம், திரு அவையின் அடிதலத்தின் பாறை என்று பேதுருவை இயேசு தேர்ந்தெடுத்தபோது நாம் காண்கிறோம். இங்கே, அவர் ஒரு புதிய திரு அவை ஒன்றை நிறுவுகிறார் என்று இயேசு தெளிவாக கூறுகிறார்:

எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார். (மத் 16: 18-19)

இந்த வசனத்தின் அடிப்படையில், நம்முடைய விசுவாசம் மூன்று காரியங்களைக் குறித்துக் கூற வேண்டும்:

  1. கிறிஸ்துவின் சித்தம் ஒரு திரு அவையை நிறுவ வேண்டும் என்பது, “பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா” என்று உறுதியளித்தார்.
  2. அவர் பேதுருவுக்கு “விண்ணரசின் திறவுகோல்களை” கொடுத்தார்.
  3. மண்ணுலகில் விண்ணுலகிலும் தடை செய்யும் மற்றும் அனுமதிக்கும் அதிகாரத்தை பேதுருவுக்கு வழங்கினார். (இந்த அதிகாரத்தில் பேதுருவுக்கு முதன் முதலில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது, பின்னர் மத்தேயு 18:18இல் அணைத்து திருதூதர்களுகும் இது உறுதியளிக்கப்படுகிறது).

கத்தோலிக்க திரு அவையின் தோற்றத்தை இந்த இடத்தில் காணலாம்! இயேசு இங்கே தம்முடைய சித்தத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறார் என்று நம்புகிறோம்; அது “என் திரு அவையைக் கட்டி,” தன் சொந்த அதிகாரத்தால், அந்தத் திரு அவையின் தலைவராக பேதுருவை நியமிப்பது என்று நாம் நம்புகிறோம்.

இயேசு இதை ஏன் செய்ய விரும்பினார்?

கத்தோலிக்க திரு அவையின் தோற்றத்திற்கு காரணம்

உயிர்த்தெழுந்த பிறகு, இயேசு தம் திருத்தூதர்களைக் அழைக்கிறார்:

இயேசு அவர்களை அணுகி, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார். (மத் 28: 18-20)

இந்த வசனங்களில், கத்தோலிக்க திரு அவையின் பிறப்பிற்கு இயேசு காரணம் நமக்கு சொல்கிறார்: அவர் கற்பிப்பதற்காகவும், தூய்மைப்படுத்தவும், ஆட்சி செய்வதற்காகவும் தனது புதிய திரு அவையை உருவாக்குகிறார்.

போப் இரண்டாம் யோவான் பவுல் அதை மேலும் எளிமையாக விளக்குகிறார்: “கிறிஸ்துவோடு இந்த ‘சந்திப்பு’ சாத்தியமாவதற்கு, கடவுள் தனது திரு அவை தோற்றுவித்தார்.” (Veritatis Splendor [“The Splendor of Truth”]), 7)  ஒவ்வொருவரும் கிறிஸ்துவை காணவும், கிறிஸ்து அவர்களின்  வாழ்கை பயணத்தில் நடக்கவும், திரு அவை உதவுகிறது. (Redemptor Hominis [“The Redeemer of Man”], 13)

திருத்தூதர்கள் தங்கள் பணியை நிறைவேற்றுகின்றனர்

புதிய ஏற்பாட்டில், திருத்தூதர் பணிகள், திருத்தூதர்கள் இயேசு அவர்களுக்கு கொடுத்த பணியை தெளிவாகப் புரிந்துகொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது.

பெந்தக்கோஸ்து நாளில், தூய ஆவியாரால் திரு அவையின் வெளிப்புற “பிறப்பை நாம் காண்கிறோம். கத்தோலிக்க திரு அவையின் வரலாற்றுத் தேடலின் முழுமையும் திரு அவை உறுதியானதுதான் இதுவேயாகும்.

பெந்தக்கோஸ்து நாளில், பேதுருவும் மற்ற திருத்தூதர்களும் தைரியமாக மீட்பின் நற்செய்தியை அறிவிக்கிறார்கள்:

அப்பொழுது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்தக் குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்; “யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்துக்கொள்ளுங்கள். எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள். ………… ஆகையால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.  அதற்குப் பேதுரு, அவர்களிடம், “நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது” என்றார். மேலும் அவர் வேறுபல சான்றுகளை எடுத்துக்கூறி, “நெறிக்கெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார்.  அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப்பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர். அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. திருத்தூதர் வழியாகப் பல அருஞ்செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன. (திருத்தூதர் பணிகள் 2:14, 36-42)

இந்த வசனங்கள், திரு அவை தனது பணிகளான, “நற்ச்செய்தி அறிவித்தல், மற்றவரை திருமுழுக்கு மூலம் கிறிஸ்துவிடம் அழைத்தல், திருதூதர்களின் போதனைகள் மற்றும் தோழமை, அப்பம் பிடுதலும் வழிபாடுகள்” ஆகியவற்றை சிறப்பாக செய்வதை அழகாக எடுத்துரைக்கிறது.

இவை நிகழ்ந்த காலம்

பெந்தக்கோஸ்து நாளில் திரு அவை பிறந்ததை விளக்கமாக பார்த்தோம். இது கிபி 29 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். மேலும் இயேசு கிறிஸ்து பேதுருவிடம் , “உன் பெயர் பாறை. இந்த பாறையின் மீது என் திரு அவையை கட்டுவேன்” என்று கூறியது கிபி 26 – கிபி 29 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்திரிக்க வேண்டும் என்பது வரலாற்று அறிஞர்களின் கூற்று.

இந்த திரு அவை இன்றும் உள்ளது!

இது கத்தோலிக்க (கத்தோலிக்க என்றல் உலகளாவிய என்று பொருள்) திரு அவை என்று அழைக்கப்படுகிறது, மற்றும் நாம் இன்னும் அதே நோக்கம் கொண்டுள்ளோம். இங்கு, கத்தோலிக்க திரு அவையின் தோற்றம் திருவிவிலியத்திலும், வரலாற்றிலும் உறுதியாக எப்படி வேரூன்றியுள்ளது என்பதை நாம் கண்டோம்.

திருவிவிலிய வரலாறு

திருவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டு நூல்கள் இஸ்ராயல் மக்களின் காலம் தொட்டே இருந்துள்ளது. பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டை தன்னுள் மறைத்துள்ளது என்பதும், புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டை விளக்கி கூறுகிறது என்பது திண்ணம்.

விவிலியத்தின் நூல்கள் ஓவ்வொன்றும் ஒரே முறையில் ஒருவரால் எழுதப்பட்டது அல்ல. வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ஆசிரியர்களால் வெவ்வேறு கால சூழ்நிலைகளில் எழுதப்பட்டது.

பழைய ஏற்பாட்டு நூல்கள் மூன்று நிலைகளை தாண்டி இன்றைய வடிவத்தை பெற்றது. முதலில் வாய்மொழியாக ஒரு தலைமுறைமிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு சென்றது. பின்னர் சில எழுத்து பணி அறிந்தவர்கள் அவற்றை எழுதி வைத்தனர். அதற்கு பின், திறமை மிக்க எழுத்தாளர்கள் எழுத்து முறையில் இருந்தவற்றை கோர்வையாக நெறிப்படுத்தினார்கள். இந்த நூல்களின் எண்ணிக்கை 39.

இந்த 39 நூல்களை யூத குழு அங்கீகரித்து யூதர்களின் புனித நூல்களாக பிரகடனப்படுத்தியது. பின்னர் கத்தோலிக்க திரு அவையும் இந்த நூல்களை அங்கீகரித்து.

யூத மக்கள் எபிரேய மொழி பேசியாதல், இந்த நூல்கள் எபிரேய மொழியில் தான் இந்த நூல்கள் எழுதப்பட்டன. கிபி இரண்டாம் நூற்றாண்டில் பாலஸ்தீனாவுக்கு வெளியே யூதர்கள் சிலர் கிரேக்கப் பகுதிகளுக்கு சென்று குடியேறினர். காலப்போக்கில் அவர்கள் கிரேக்க மொழியை வழக்கமாகிக்கொண்டனர். அதனால் தாய் மொழியாம் எபிரேய மொழியை மறந்தனர். இவர்களுக்காக இந்த நூல்கள் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. இவற்றுடன் கிரேக்க மொழியில் எழுத பெற்ற எழு நூல்களும் சேர்த்துக்துக்கொள்ளபட்டன.  இந்த எழு நூல்களையும் சேர்த்து 46 நூல்கள் பழைய ஏற்பாட்டில் இடம்பெற்றது. இயேசுவின் காலத்தில் (கிமு 4 – கிபி 29) இந்த நூல்கள் மட்டுமே புனித நூல்களாக கருதப்பெற்றது. பழைய ஏற்பாடு என்ற சொல் இல்லை. கி.மு. 90 இல் ஜாமினியாவில் நடந்த யூத சபை, கிரேக்க மொழியில் எழுதப்பெற்ற நூல்களை அங்கீகரிக்கவில்லை. இதை காரணம் காட்டி பிரிவினை சபையினர் இந்த ஏழு புத்தகங்களை ஏற்றுக்கொள்வதில்லை. 

கிறிஸ்துவின் உலக வாழ்வு மற்றும் தொடக்க கால திரு அவையின் வளர்ச்சியை புதிய ஏற்பாடு நமக்கு எடுத்துரைக்கிறது. புதிய ஏற்பாடு 27 நூல்களை கொண்டுள்ளது. இவை அணைத்தும் கிரேக்க மொழயில் எழுத பெற்றன. இவை எழுத பெற்ற காலங்கள்  கிபி 5௦ – கிபி 125.  முதலில் எழுதபெற்ற நூல் தெசலோனிக்கர்களுக்கு எழுதிய முதல் திருமுகம். நற்செய்தி நூல்கள் கிபி 7௦ – கிபி 1௦௦ வாக்கில் எழுதப்பெற்றன.  இவ்வாறு அணைத்து புதிய ஏற்பாடு நூல்களும் கிபி 125ஆம் ஆண்டு எழுதி முடிக்கப்பட்டன. ஆயுனும் இன்று இருப்பது  போல் இந்த 27 நூல்களும் ஒரே கோர்வையாக இல்லை.  அந்த அந்த கால சூழலுக்கு ஏற்ப ஒரு குறிபிட்ட உள்ளூர் பங்குகுகோ, ஒரு தனி நபருக்கோ எழுதப்பட்டவை.மேலும் 27 நூல்களை தவிர பிற நூல்களும் வழக்கத்தில் இருந்தன.

கிபி 367 ஆம் ஆண்டு எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியாவின் ஆயர் அதானாசியுஸ் முதன் முதலில் புதிய ஏற்பாட்டின் 27 நூல்களை வகைப்படுதின்னர். கி.பி. 382 ஆம் ஆண்டு ரோமில் நடந்த பேரவையில் அன்றைய திருத்தந்தை புனித முதாலம் தமாசுஸ் இந்த 27 நூல்களையும் பிரகடனப்படுத்தினார். மேலும் திருவிவிலியத்தில் இடம்பெறவேண்டிய நூல்களை (46 பழைய ஏற்பாடு நூல்களும் 27 புதிய ஏற்பாடு நூல்களும்) முடிவு செய்தனர். 393 ஆம் ஆண்டு ஹிப்போவில் நடைபெற்ற ஆயர் பேரவையுளும் (Synod of Hippo) கி.பி. 397 ஆம் ஆண்டு கார்தேஜில் (Council of Carthage) நடைபெற்ற ஆயர் பேரவையுளும் இதே 27 நூல்கள் பிரகடனப்படுத்தப்பட்டன. இதனால் இந்த 27 நூல்களை தவிர வழக்கத்தில் இருந்த பிற நூல்களை புதிய ஏற்பாட்டில் சேர்க்க அவை தூய ஆவியாரின் உந்துததால் எழுதப்பட்டவை அல்ல என்பது தின்னமானது. இந்தகால கட்டத்தில் ரோமையில் கத்தோலிக்க திரு அவை பரவலானதை அடுத்தி இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. மொழிபெயர்புப்பணியை அன்றைய திருத்தந்தை புனித முதாலம் தமாசுஸின் ஆணைக்கேற்ப தூய எரோணிமுசு (St. Jerome) கி.பி. 382-கி.பி. 405 காலகட்டத்தில் செய்து முடித்தார். இதை “வுல்காத்தா” (Vulgate) மொழிபெயர்ப்பு என்று கூறுவர். 

மேலும் கி.பி. 787 நைசியாவில் நடந்த  இரண்டாவது கவுன்சிலில் முந்தைய சிறிய பேரவைகளின் ஆணைகளை ஏற்றுக்கொண்டது. கி.பி. 1441 ஆம் ஆண்டு புளோரன்ஸ் கவுன்சில் ரோம், ஹிப்போ மற்றும் கார்தேஜ் பேரவைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல்களின் பட்டியலை அங்கீகரித்தது. கி.பி. 1550 ஆம் ஆண்டு, 46 பழைய ஏற்பாடு நூல்கள் 27 புதிய ஏற்பாட்டு நூல்கள் பட்டியல் ட்ரெண்ட் பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

17 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு திருவிவிலியம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. பல வருடங்களாக, கத்தோலிக்க திரு அவை விசுவாசிகளிடம் திருவிவிலிய வாசிப்பை ஊக்கப்படுத்தியே வருகிறது. அதே வேளையில்  திருவிவிலியத்தில் கூறப்பட்டுள்ள சத்தியத்தினை தூய ஆவியாரின் ஏவுதளோடு விளக்கவும் கற்பிக்கவும் , திரு அவையை ஒற்றுமையோடு வழிநடத்தும் அதிகாரத்தை, தன்னகத்தே கொண்டுள்ளது. 14  ஆம் நூற்றாண்டு முதல் திரு அவையின் ஒப்புதல் இல்லாமல் சுயமாக திரு விவிலியத்தை மொழி பெயர்தவர்களையிம் அந்த மொழிபெயர்புகளையும் திரு அவை வன்மையாகவே கண்டித்து வந்துள்ளது.

கத்தோலிக்க திரு அவை தான் தூய ஆவியாரின் ஏவுதலால் எந்த எந்த நூல்கள் எழுதப்பட்டுள்ளன என்பதை முடிவு செய்து திருவிவிலியத்தை நமக்கு வழங்கியுள்ளது. வேறு எந்த சபையும் இந்த உரிமையை கோர முடியாது. திருவிவிலியம் தூய ஆவியாரின் ஏவுதலால் எழுதப்பட்ட நூல்களை கொண்டுள்ளது. ஆனால் அவை விளக்கப்பட வேண்டும். பல்வேறு பிரிவினை சபைகள் தங்களுக்கு ஏற்றவாறு தூய ஆவியாரின் ஏவுதலால் எழுதப்பட்ட நூல்களுக்கு விளக்கம் கொடுதுக்கொண்டுள்ளனர். கத்தோலிக்க திரு அவை இந்த நூல்களின் பழமையான தொகுப்புகளையும் மற்றும் அசல் புரிதலைக் கொண்டுள்ளது. திருத்தந்தை, இயேசுவால் தனது மந்தையை பேணி காக்க திரு அவையின்  தந்தையாக அறிவிக்கப்பட்ட பேதுருவின் வாரிசு. அதே இயேசு தம்முடைய திரு அவையுடன் நேரம் முடிவடையும்  வரை இருப்பேன் என உறுதியளித்தார் (மத் 28: 20). இயேசு திருத்தூதர்களுக்கு கற்பிதத்தை நமக்கு கற்பிக்க ஒரு திரு அவையை நிறுவினாரே ஒழிய ஒரு புத்தகத்தையோ, மனிதரையோ அல்ல. திருவிவிலியத்தில் எந்த எந்த நூல்கள் இருக்க வேண்டும் எனவும், அவற்றை வரிசை படுத்தி நமக்கு இன்றைய வடிவத்தில் கொடுத்து கத்தோலிக்க திரு அவை. வேறு எந்த சபையும் இந்த உரிமையை கோர முடியாது. அவர்களின் பரிசுத்த வேதாகமங்கள் அனைத்தும் கத்தோலிக்க திரு அவையிடமிருந்தே பெறப்பட்டவை.

கி.பி. 29 இல் பிறந்த திரு அவை கி.பி. 1550 ஆம் ஆண்டு திருவிவிலியத்தை தொகுத்து வழங்கி, அதற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் பிற மொழயில் மொழிபெயர்ப்பு செய்ய அனுமதித்தது. 

Related posts

Leave a Comment