கத்தோலிக்கம் என்றால் என்ன?

what do you mean by catholic

1. கத்தோலிக்க திருஅவையை நிறுவியது யார்? எப்போது?

கத்தோலிக்க திருஅவை கிறிஸ்து உயிரத்த ஐம்பதாம்  நாளான பெந்தகோஸ்தே நாளில் தூய ஆவியிரின் அருட்பொழிவின் வழியாக நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் தோற்றுவிக்கப்பெற்றது. 

2. கத்தோலிக்க என்ற வார்த்தையின் பொருள் என்ன? 

கத்தோலிக்க என்றால் உலகளாவிய அல்லது பொதுவான என்று பொருள். கத்தோலிகோஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. 

3. ஏன் திருஅவை கத்தோலிக்க திருஅவை என்று அழைக்கப்படுகிறது?

கிறிஸ்துவே திருஅவையின் தலையாய் இருப்பதாலும் (எபே 1:22-23), நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.(மத்28:19) என்ற நமது ஆண்டவரின் கட்டளைகிணங்க அனைத்து மக்களுக்கும் நற்செய்தி அறிவிக்கும் பணியை மேற்கொள்வதாலும் திருஅவை  கத்தோலிக்க திருஅவை என்று அழைக்கப்படுகிறது. (கத்தோலிக்க மறைக்கல்வி 830-831)

4. எப்போது யாரால் கத்தோலிக்க என்ற வார்த்தை திருஅவையை குறித்து முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது?

அந்தியோக் ஆயர் இஞ்ஞாசியார் ஸ்மிர்னா ஊர் மக்களுக்கு கி.பி. 110 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் முதன் முதலில் கத்தோலிக்க என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அக்கடிதத்தில் அவர் கத்தோலிக்க என்ற வார்த்தைக்கு விளக்கம் ஏதும் அளிக்காததால், அந்த வார்த்தை ஏற்கனவே (20 – 30 ஆண்டுகளாக) அதாவது கிபி 80 – 100 ஆம் ஆண்டு வாக்கிலிருந்து மக்கள் மத்தியில் பயன் பாட்டில் இருந்திருப்பதாக அறியலாம். 

Related posts

Leave a Comment