திருவிவிலியத்தை எவ்வாறு வாசிக்க வேண்டும் என திரு அவை கற்பிக்கிறது

how-to-read-the-bible

இன்று இருக்கும் பல ஆயிர கணக்கான சபகைள் தங்களுக்கு என ஒரு விசுவாசத்தை கொண்டுள்ளன. ஒன்றுக்கு ஒன்று முரண்படாவாகவே உள்ளன. எடுத்துக்காட்டாக ஏழாம் நாள் சபையினர் சனிக்கிழமை தான் ஆண்டவரின் நாள் என்கின்றனர், அனல் இதை மற்ற சபையினர் ஏற்பதில்லை. சில சபைகளில் பெண்களை குருக்களாக ஆக்குகிறார்கள். மற்ற சபைகளில் குருத்துவம் என்பதே இல்லை. 

இதில் வேடிக்கை என்னவெனில், இந்த சபைகள் தாங்கள் கொண்டு இருக்கும் விசுவாசத்திற்கு திருவிவிலியத்தையே ஆதாரமாக சொல்கின்றன. ஒரே திருவிவிலியம்  பல்வேறு விதமான விளக்கங்களை கொண்டு இருக்க முடியமா? நிச்சியமாக  இல்லை! இங்கு பிரச்சனையே, இந்த சபைகள் தங்களுக்கு தகுந்தவாறு  திருவிவிலியத்தின் விளக்கத்தை திருத்திக்கொள்வதே!

திருவிவிலியத்தை எவ்வாறு படித்து புரிந்து கொள்ளவேண்டும் என கத்தோலிக்க திரு அவை நமக்கு அறிவுறுத்துகிறது. அதன் படி நாம் திருவிவிலியத்தை வாசித்தோமெனில் பல தேவையில்லாத குழப்பங்களை நாம் தவிர்க்க முடியும். 

கத்தோலிக்க மறைக்கல்வி திருவிவிலியத்தை மறைநூல் என்றே அழைக்கிறது. மறைநூல் பற்றி கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வி சுருக்கத்தில் (18 – 24)  கூறப்பட்டுள்ளவையை இங்கு தொகுத்துள்ளளோம்.

மறைநூல் உண்மையை போதிப்பதன் கரணம் என்ன?

இறைவனே மறைநூலின் ஆசிரியர். எனவே இது இறை ஏவுதலால் எழுதப்பட்டது எனவும் நமது மீட்புக்குத்  தேவையான உண்மைகளைத் தவறின்றி போதிக்கின்றது எனவும் கூறுகிறோம். தாம் கற்றுத்தரவேண்டியவற்றை எழுதுமாறு தூய ஆவியார் மனித ஆசிரியர்களை தூண்டினார். கிறிஸ்துவ நம்பிக்கை, “நூலின் சமயம்” ஆகாது. அது இறைவார்தையின் சமயமாகும். இந்த இறைவார்த்தை “எழுதப்பட்ட, ஒலியற்ற வார்த்தை அன்று; மாறாக,  மனிதரான வாழும் வார்த்தையாகும்” (கிளேர் வாக்ஸ் புனித பெர்னார்து)

மறைநூலை எவ்வாறு வாசிக்க வேண்டும் ?

தூய ஆவியாரின் துணையாலும், திரு ஆசிரியத்தின் வழிகாட்டுதலாலும், கீழ்காணும் மூன்று  வரையுறைகளுக்கு ஏற்ப மறைநூலை வசித்து, விளக்கம் அளிக்க வேண்டும்.

  1. மறைநூல் முழுவதன் உள்ளடக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் கவனத்தில் கொண்டு வாசிக்க வேண்டும். 
  2. திரு அவையின் உயிரோடுள்ள மரபின் வழிநின்று வாசிக்க வேண்டும்.
  3. நாம் நம்புகின்ற உண்மைகளுடனும் அவற்றுக்கு இடையே நிலவும் உள்ளார்ந்த இணக்கத்துடனும் நமது கிறிஸ்துவ நம்பிக்கையுடனும் தொடர்பு படுத்திக் கவனத்தோடு வாசிக்க வேண்டும்.

மறைநூலின் திருமுறை என்பது என்ன?

திருத்தூது மரபுப்படி திரு அவை ஏற்றுக்கொண்ட நூல்களின் முழுமையான பட்டியலே மறைநூலின் திருமுறை என அழைக்கப்படுகிறது. இத் திருமுறைப்படி பழைய ஏற்பாட்டில் 46 நூல்களும் புதிய ஏற்பாட்டில் 27 நூல்களும் உள்ளன.

கிறிஸ்துவர்களுக்கு பழைய ஏற்பாட்டின் முக்கியத்துவம் என்ன?

கிறிஸ்துவர்கள் பழைய ஏற்பாட்டை உண்மையான இறைவார்த்தையாக ஏற்று வணக்கம் செலுத்துகின்றனர். பழைய ஏற்பாட்டு நூல்கள் அனைத்தும் இறை ஏவுதலினால் எழுதப்பெற்று, நிலையான மதிப்பை கொண்டுள்ளன. இறைவனுடைய மீட்பளிக்கும் அன்பு வெளிப்படுத்தப்பட்ட முறைக்கு இவை சாட்சியம் பகிர்கின்றன. எல்லாவற்றிக்கும் மேலாக, அனைத்துலக மீட்பராகிய கிறிஸ்துவின் வருகைக்குத் தயாரிப்பாக இவை எழுதப்பட்டன.

கிறிஸ்துவர்களுக்கு புதிய  ஏற்பாட்டின் முக்கியத்துவம் என்ன?

இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்ட புதிய ஏற்பாடு இறை வெளிப்பாட்டின் முழு நிறைவான உண்மையை நமக்கு வழங்குகிறது. புதிய ஏற்பாட்டில் உள்ள மத்தேயு,மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோரின் நற்செய்தி நூல்களே திருமறை நூல்களுக்கு எல்லாம் இதயம் போன்றவை; ஏனெனில் இயேசுவின் வாழ்விற்கும் போதனைக்கும் அவையே முக்கிய சாட்சியங்களாக விளங்குகின்றன. அவ்வகையில் இந்நான்கு நற்செய்தி நூல்களும் திரு அவையில் தனி சிறப்பிடம் பெறுகின்றன.

பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன?

இறைவனின் வாக்கு ஒன்றே என்பதால் மறைநூலும் ஒன்றே. மீட்பின் இறைத்திட்டமும் ஒன்றே. இரு ஏற்பாடுகளின் இறை ஏவுதலும் ஒன்றே. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாட்டிற்குத் தயாரிப்பாக உள்ளது. புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டின் நிறைவாக அமைகிறது; ஒன்று மற்றொன்றைத் தெளிவுபடுத்துகிறது.

திரு அவையின் வாழ்வில் மறைநூலின் பங்கு என்ன?

மறைநூல் திரு அவைக்கு ஆக்கமும் ஊக்கமும் தருகிறது; இறைமக்களின் நம்பிக்கையின் உறுதிப்பாடாகவும், ஆன்ம உணவாகவும், அருள் வாழ்வின் ஊற்றாகவும் உள்ளது; இறையியலுக்கும் அருள்பணி போதனைக்கும் உயிர்நாடியாக உள்ளது. “என் காலடிக்கு உன் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!” (தி பா 119:105) எனத் திருப்பாடல் ஆசிரியர் மறைநூல் பற்றி கூறுகிறார். எனவே மறைநூலை வாசிக்க இறைமக்களை திரு அவை அறிவுறுத்துகிறது; ஏனெனில் “மறைநூலை அறியாமல் இருப்பது கிறிஸ்துவை அறியாமல் இருப்பதாகும்.” (புனித ஏரோணிமு )

Related posts

Leave a Comment